நடிகர் தனுஷின் புதிய 2 படங்கள் அடுத்தடுத்து ஓடிடியில் ரிலீஸாக இருப்பது ரசிகர்களிடம் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் திரையரங்கில் கடந்த 9ஆம் தேதி வெளியான கர்ணன் திரைப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சனங்கள் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பை பெற்றது. இதை தொடர்ந்து தமிழகம் முழுவதும் தற்போது கொரோனா தொற்றின் இரண்டாம் அலை வேகமாக பரவி வருவதால் பல்வேறு கட்டுப்பாடு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதன்படி திரையரங்குகளும் மூடப்பட்டது.இதனால் திரையரங்குகளில் இரண்டு வாரங்கள் மட்டுமே ஓடிக்கொண்டிருந்த கர்ணன் திரைப்படத்தை ஓடிடி தளத்தில் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது. அதன்படி வரும் மே 14-ஆம் தேதி கர்ணன் திரைப்படம் ஓடிடியில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள ‘ஜகமே தந்திரம்’ திரைப்படமும் வரும் ஜூன் மாதம் 18ஆம் தேதி நேரடியாக ஓடிடியில் வெளியாக உள்ளது. இப்படி தனுஷின் இரண்டு படங்கள் அடுத்தடுத்து ஓடிடியில் வெளியாக இருப்பது அவரது ரசிகர்களிடம் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. தனுஷின் ஜகமே தந்திரம் திரைப்படம் 17 மொழிகளில் வெளியிட இருப்பது குறிப்பிடத்தக்கது.