முன்னணி நடிகர் தனுஷின் முதல் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான கர்ணன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றது. இதை தொடர்ந்து தனுஷின் ஜகமே தந்திரம் திரைப்படமும் ஓடிடில் வெளியாக உள்ளது. தனுஷ் தற்போது ஹாலிவுட் படத்திற்காக அமெரிக்கா சென்றுள்ளார்.
இந்நிலையில் நடிகர் தனுஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தமிழ் சினிமாவில் வெளியான காதல் கொண்டேன் திரைப்படத்திற்கு முன் எடுக்கப்பட்ட முதல் புகைப்படத்தினை வெளியிட்டுள்ளார். இந்தப் புகைப்படத்தினை தனுஷ் ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.