திருப்பத்தூரில் கலெக்டர் கொரோனா வார்டுகளில் கவச உடையுடன் திடீர் ஆய்வு மேற்கொண்டுள்ளார்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை அதிகரித்த வண்ணம் இருக்கின்றது. இதனை கட்டுப்படுத்தும் வகையில் மாவட்ட நிர்வாகம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இவ்வாறு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த ஐந்து பேர் மூச்சுத் திணறல் காரணமாக இறந்ததை,கொரோனா பாதிப்பு மற்றும் ஆக்ஸிஜன் பற்றாக்குறையினால் இறந்ததாக வதந்தியை பரப்புகின்றனர். இதுகுறித்து மருத்துவ அலுவலர் திலீபன் கூறியபோது, அவர்கள் வேறு நோய் தொற்று காரணமாக இறந்து இருப்பதாக கூறியுள்ளார்.
இந்நிலையில் மாவட்ட கலெக்டர் கவச உடையில் கொரோனா வார்டுகளில் திடீரென்று அரசு மருத்துவமனைக்கு ஆய்வு மேற்கொண்டுள்ளார். அப்போது அங்கு இருக்கும் நோயாளிகளிடம் மருந்து மாத்திரைகள், ஊசி போடுதல், செவிலியர்கள், டாக்டர்கள் போன்றோர் நேரத்திற்கு வருகிறார்களா என்று கேட்டறிந்துள்ளார். மேலும் ஆக்சிஜன் சரியான முறையில் கிடைக்கின்றதா, என்னென்ன உணவுகள் வழங்கப்படுகிறது என்றும் அவர் கேட்டுள்ளார். இதனையடுத்து அங்கு பணிபுரியும் ஊழியர்களிடம் ஆக்சிஜன் முடிந்தபின் சிலிண்டர்களை உடனடியாக மாற்ற வேண்டும் என கலெக்டர் சிவனருள் தெரிவித்துள்ளார்.
இதனைதொடர்ந்து கழிவறை சுத்தமாக இருக்கிறதா என்றும் அவர் மேற்பார்வையிட்டுள்ளார். இதன்பின்னர் திருப்பத்தூர் மருத்துவ அலுவலர் திலீபன், மருத்துவர்கள் பிரபாகரன், நிர்வாக அலுவலர் சரவணன், சுந்தரமூர்த்தி கொண்ட குழுவினரிடம் தினந்தோறும் அரசு மருத்துவமனைக்கு தேவையான ஆக்சிஜன் எவ்வளவு வேண்டும் என்றும் கேட்டுள்ளார். மேலும் ரெம்டெசிவர். ஊசி மருந்து எவ்வளவு கையிருப்பு இருக்கின்றது போன்ற பல்வேறு தகவல்களை கேட்டறிந்து ஆலோசனை வழங்கியுள்ளார்.