இந்தியாவில் ஒரே நாளில் கொரோனா தொற்று பலியானவர்களின் எண்ணிக்கை 4,187 ஆக உயர்ந்துள்ளது.
நாடு முழுவதும் கொரோனா தொற்றின் 2ஆம் அலை நாளுக்கு நாள் வேகமெடுத்து வருகிறது. இந்நிலையில் நேற்று ஒரேநாளில் தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை 4,01,078 ஆக இருந்துள்ளது. இதனையடுத்து நோய் பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2,18,92,676 ஆக உயர்ந்துள்ளது. இதனைத்தொடர்ந்து கடந்த 24 மணி நேரத்தில் இந்த கொடிய நோய்க்கு 4,187 பேர் உயிரிழந்துள்ள நிலையில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2,34,083 ஆகா உயர்ந்துள்ளது.
மேலும் இதுவரை 1,79,30,960 பேர் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கொரோனா தொற்றின் 2ஆம் அலையால் உயிரிழப்புகள் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் மக்கள் அனைவரும் அச்சத்தில் உள்ளனர். எனவே நோய் பரவலை கட்டுப்படுத்த மத்திய அரசும், மாநில அரசுகளும் இணைந்து பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.