Categories
உலக செய்திகள்

சுவிஸ் எல்லையில் மாட்டிய நபர்.. சோதனையில் சிக்கிய ஆவணங்கள்.. அதிகாரிகள் அதிர்ச்சி..!!

சுவிற்சர்லாந்து எல்லையில் சுங்க அதிகாரிகளிடம் மாட்டிய ஒரு நபர் போலியான ஆவணங்கள் நிறைய வைத்திருந்ததால் அதிகாரிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

சுவிட்சர்லாந்தில் இருந்து கடந்த ஏப்ரல் மாதத்தில் ஒரு நபர் ஜெர்மனிக்கு வந்தபோது, எல்லை நகரம் Singen-ல் இருந்த சுங்க அதிகாரிகளிடம் மாட்டியுள்ளார். அப்போது சுங்க அதிகாரிகள் அவரை சோதித்தபோது அவரிடம் சுமார் 38 மில்லியன் யூரோ மதிப்புடைய தொகைக்கான ஆதார பத்திரம் இருந்துள்ளது.

ஆனால் தன்னிடம் பணமில்லை என்று அதிகாரிகளிடம் அவர் கூறியுள்ளார். ஆனால் அவரிடம் நிறைய ஆவணங்கள் இருந்ததால் சுங்க அதிகாரிகள் சந்தேகம் அடைந்துள்ளனர். அதாவது வழக்கமாக ஐரோப்பிய நாடுகளுக்கு இடையில் பத்தாயிரம் யூரோ தொகைக்கு மேல் பணம் வைத்திருந்தால் மட்டும் தான் ஆதார பத்திரம் தேவைப்படும்.

எனினும் அவரிடம் இருந்த பத்திரத்தில் குறிப்பிடப்பட்டிருந்த பணத்தை அவர் வைத்திருக்கவில்லை என்று சுங்க அதிகாரிகள் உறுதிப்படுத்தினர். மேலும் அவரிடமிருந்த பத்திரங்கள் சரியானதா? என்ற விசாரணையின் போது அந்த நபர் பிரான்ஸ் தூதரக அதிகாரிகளுக்குரிய சிறப்பு கடவுச்சீட்டை காண்பித்து தப்ப முயற்சித்திருக்கிறார்.

ஆனால் அந்த கடவுச்சீட்டும் போலியானது என்பது தெரிந்து அவரின் உடமைகளை சோதனை செய்துள்ளனர். அப்போது அந்த நபரிடமிருந்து போலியான ஆவணங்கள் மற்றும் கடவுச்சீட்டுகள் கைப்பற்றப்பட்டது. இதைத்தொடர்ந்து அந்த நபர் மீது போலி ஆவணங்களை தயாரித்தது, பொய் தகவல் கூறி ஏமாற்றியது போன்ற பல பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Categories

Tech |