Categories
மாநில செய்திகள்

நாளை முதல் 5 மாவட்டங்களில்… ரெம்டெசீவர் மருந்து விற்பனை… வெளியான அறிவிப்பு..!!

நாளை முதல் ஐந்து மாவட்டங்களில் ரெம்டெசீவர் மருந்து விற்பனை செய்யப்படும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று தீவிரமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. ஏற்கனவே இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் வரும் மே 10ஆம் தேதி முதல் 24ஆம் முழு ஊரடங்கு அமல்படுத்தி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதைத்தொடர்ந்து சில மாவட்டங்களில் ரெம்டெசீவர் மருந்து விற்பனை செய்யப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

சென்னையில் பல இடங்களில் ரெம்டெசீவர் மருந்து விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. மக்கள் தங்களது அடையாள அட்டையை காண்பித்து மருந்துகளை வாங்கி செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து நாளை முதல் சேலம், மதுரை, கோவை உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களில் ரெம்டெசீவர் மருந்து விற்பனையாகம் தொடங்கப்பட உள்ளது என்று சுகாதார துறை அமைச்சர் மா. சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |