Categories
கிரிக்கெட் விளையாட்டு

மீதமுள்ள ஐபில் போட்டிகளை… நாங்க நடத்தி காட்டுறோம் …! இலங்கை கிரிக்கெட் வாரியம் விருப்பம்…!!!

ஐபிஎல் தொடரில்  மீதமுள்ள போட்டிகளை , இலங்கையின் நடத்துவதற்காக இலங்கை கிரிக்கெட் வாரியம் விருப்பம் தெரிவித்துள்ளது.

14வது ஐபிஎல் தொடர் கடந்த மாதம் 9ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வந்தது. ஆனால் வீரர்களுக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டதால்,  போட்டிகள்  தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. எனவே ஐபிஎல் தொடரில் பங்கு பெற்றுள்ள வெளிநாட்டு வீரர்கள் நாடு திரும்புவதற்கான பணிகளை பிசிசிஐ மேற்கொண்டு வருகிறது.இந்நிலையில் ஐபிஎல் தொடரில் மீதமுள்ள 31 போட்டிகளை நடத்த வேண்டிய கட்டாயத்தில் பிசிசிஐ உள்ளது. இந்நிலையில் மீதமுள்ள ஐபிஎல் போட்டிகளை, இலங்கையின் நடத்துவதற்காக இலங்கை கிரிக்கெட் வாரியம் விருப்பம் தெரிவித்துள்ளது.

இதுபற்றி இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் தலைவரான அர்ஜூன டி.செல்வா கூறும்போது , ஐபிஎல் தொடரில் மீதமுள்ள போட்டிகளை எங்களால் நடத்தமுடியும். இதற்காக வருகின்ற செப்டம்பர் மாதத்தில் போட்டியை நடத்துவதற்கு மைதானங்கள் தயாராக உள்ளதாகவும், அவர் தெரிவித்தார். இதேபோன்று கடந்த ஆண்டும்,  இந்தியா கொரோனா  தொற்று  பாதிப்பின் போது,  இலங்கை கிரிக்கெட் வாரியம் ,ஐபிஎல் போட்டிகளை நடத்த விருப்பம் தெரிவித்திருந்தது ஆனால் ஐபில் போட்டிகளை, பிசிசிஐ நிர்வாகம் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்துவதற்கு முன்னுரிமை வழங்கியது.இந்நிலையில்   மீதமுள்ள போட்டிகளை பிசிசிஐ நிர்வாகம் ,ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளது .

Categories

Tech |