மனைவிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு இருந்த காரணத்தினால் மனைவியை கொன்றுவிட்டு குற்ற உணர்ச்சியில் தானும் மாடியில் இருந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .
பீகார் மாநிலம் பாட்னாவில் ரயில்வே துறையில் பணிபுரியும் லால் என்ற நபரின் மனைவி தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். அவருக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு கொரோனா உறுதியானது. இதை தொடர்ந்து கொரோனா தனக்கும் பரவி விடும் என்ற பயத்தில் மனைவியின் தலையை துண்டித்து கொடூரமாக கொலை செய்துவிட்டு, பின்னர் குற்ற உணர்ச்சியில் மாடியிலிருந்து தானும் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதையடுத்து இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.