வங்கி, ஏடிஎம் மையங்கள் மற்றும் காப்பீடு நிறுவனங்கள் 50 சதவீத பணியாளர்களுடன் இயங்க தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருகின்றது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை அறிவித்து வருகின்றது. ஏற்கனவே இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது மே 10-ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை முழு ஊரடங்கு என்ற அறிவிப்பையும் தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
இதில் பல்வேறு அறிவிப்புகள் வெளியாகியுள்ளது. பெட்ரோல், டீசல் பங்குகள் நேரக் கட்டுப்பாடுகள் இன்றி செயல்பட தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. டுன்சோ போன்ற மின் வணிக நிறுவனங்கள் மூலம் மளிகை, காய்கறி வினியோகிக்க பகல் 12 மணி வரை இயங்கும். இதைத்தொடர்ந்து வங்கி, ஏடிஎம் மையங்கள், காப்பீடு நிறுவனங்கள் 50% பணியாளர்களுடன் இயங்க தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.