நடத்தையில் சந்தேகப்பட்டு கூலி தொழிலாளி கள்ளக்காதலியை கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாவட்டத்திலுள்ள மண்ணூர்பேட்டை பகுதியில் சுரேஷ் என்ற கூலி தொழிலாளி வசித்து வருகிறார். இந்நிலையில் திருமணமான சுரேஷிற்க்கும் அதே பகுதியில் வசிக்கும் மணிமாலா என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு அது கள்ளக்காதலாக மாறி விட்டது. இதனையடுத்து அவர்கள் இருவரும் ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளனர். அப்போது கள்ளக்காதலியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு நடந்துள்ளது.
இந்நிலையில் இருவருக்கும் இடையே மீண்டும் சண்டை வந்த போது கோபம் அடைந்த சுரேஷ் மணிமாலாவின் கழுத்தை நெரித்து கொலை செய்து விட்டார். அதன்பின் சுரேஷ் நடந்த அனைத்து விவரங்களையும் தெரிவித்து அம்பத்தூர் தொழிற் பேட்டை காவல் நிலையத்தில் சரண் அடைந்து விட்டார். இதனையடுத்து காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.