Categories
மாநில செய்திகள்

BREAKING: டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட அதிரடி அறிவிப்பு…!!

கொரோனா பரவல் காரணமாக குரூப்-1 முதன்மைத் தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருகின்றது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை அறிவித்து வருகின்றது. ஏற்கனவே இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது மே 10-ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை முழு ஊரடங்கு என்ற அறிவிப்பையும் தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இதில் பல்வேறு அறிவிப்புகள் வெளியாகியுள்ளது.

இதன் காரணமாக மே 28, 29, 30 ஆகிய தேதிகளில் நடைபெறவிருந்த குரூப் 1 முதன்மை தேர்வும், ஜூன் 6இல் இந்த ஒருங்கிணைந்த பொறியியல் சார்நிலைப்பணி பதவிக்கான தேர்வு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்படுவதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

Categories

Tech |