தமிழகத்தில் கடந்த ஒரு மாதமாக கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருவதால் இரவு நேர ஊரடங்கு மற்றும் வார இறுதி நாட்களில் ஊரடங்கு உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதுமட்டுமன்றி பகல் 12 மணி வரை மட்டுமே கடைகள் செயல்பட அனுமதிக்கப்பட்டு அந்தக் கட்டுப்பாடுகள் தற்போது நடைமுறையில் உள்ளது. ஆனால் நேற்று ஒரே நாளில் கொரோனா பாதிப்பு 27 ஆயிரத்து நெருங்கியது. இந்நிலையில் தமிழகத்தில் வருகின்ற மே 10ஆம் தேதி முதல் 24ம் தேதி வரை முழு ஊரடங்கு அமல் படுத்தப் படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதுமட்டுமன்றி மக்கள் தேவையில்லாமல் வெளியில் சென்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இரண்டு வார முழு ஊரடங்கை மக்கள் முறையாக கடைபிடிக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இரண்டு வாரங்களில் மேலும் கொரோனா அதிகரித்தால் நோயை கட்டுப்படுத்துவது சவால் ஆகிவிடும். மக்கள் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம். அனைவரும் கட்டாயம் மாஸ்க் போட வேண்டும். கொரோனா குணப்படுத்தக் கூடிய நோய்தான். மக்கள் யாரும் அஞ்ச வேண்டாம் என தெரிவித்துள்ளார்.