ஊடகத்தில் பணிபுரியும் அனைத்து பணியாளர்களுக்கும் இலவசமாக தடுப்பூசி செலுத்தப்படும் என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருகின்றது. பல மாநிலங்களில் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக நோயாளிகள் தொடர்ந்து உயிரிழந்து வருகின்றனர். இதற்காக மத்திய அரசு போராடி வருகின்றது. இதை தொடர்ந்து டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் சுகாதாரத்துறை அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்திய பிறகு மிகப்பெரிய அளவில் பத்திரிகை ஊடகம், இணையதளங்களில் பணிபுரியும் நபர்களுக்கு இலவசமாக தடுப்பு ஊசி செலுத்தப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
மேலும் தற்போது டெல்லியில் ஆக்ஸிஜனுக்கு பஞ்சமில்லை. எந்த ஒரு நோயாளியும் ஆக்சிஜன் இல்லாத காரணத்தினால் உயிரிழக்கவில்லை. அனைவருக்கும் தடுப்பு ஊசி செலுத்தப்படும் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றது. இதைத்தொடர்ந்து ஊடகங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு இலவசமாக தடுப்பூசி போடப்படும் என்று அவர் தெரிவித்தார்.