ஐபில் தொடரில் கொல்கத்தா அணியில் இடம்பெற்றிருந்த ,பிரஷித் கிருஷ்ணாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது .
14வது ஐபிஎல் தொடர் கடந்த மாதம் 9ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வந்தது. ஆனால் வீரர்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டதால், போட்டிகள் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. எனவே ஐபிஎல் தொடரில் பங்கு பெற்ற, வெளிநாட்டு வீரர்கள் நாடு திரும்புவதற்கான பணிகளை பிசிசிஐ மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில் கொல்கத்தா அணி வீரரான பிரஷித் கிருஷ்ணா கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் , தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. வேகப்பந்து வீச்சாளர் பிரஷித் கிருஷ்ணா , கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவர் ஆவார். இவர் இந்திய அணியின் ஒருநாள் போட்டிகளில் விளையாடி உள்ளார்.அதோடு இவர் உலக சாம்பியன்ஷிப் டெஸ்ட் போட்டிக்கும் தேர்வாகி உள்ளார் .