ரெனால்ட் நிறுவனமானது எம்.பி.வி என்ற புதிய மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது .
இந்தியாவின் ரெனால்ட் நிறுவனம் 4-மீட்டர்களுக்குள் உருவாக்கி இருக்கும் எம்.பி.வி. கார் மாடலான டிரைபர் இந்தியாவில் ஆகஸ்ட் 28 ஆம் தேதி முதல் அறிமுகம் செய்ய உள்ளதாக கூறியுள்ளது. இந்த புதிய காருக்கான முன்பதிவு ஆகஸ்ட் 17 ஆம் தேதியிலிருந்து துவங்குகிறது. இதற்கு முன்னதாக சர்வதேச சந்தையில் டிரைபர் கார் அறிமுகம் செய்யப்பட்டது.
இந்த புதிய டிரைபர் முன்பதிவு செய்ய ரூ. 11,000 வரை கட்டணமானது நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கான முன்பதிவு ஆன்லைன் மற்றும் நாடு முழுவதும் இயங்கி வரும் ரெனால்ட் விற்பனை நிலையங்களில் நடைபெறுகிறது. குறிப்பாக, 4 மீட்டருக்குள்ளாக 7 பேர் பயணிக்கும் வகையில் டிரைபர் எம்.பி.வி.யானது அறிமுகமாக உள்ளது.
இந்நிறுவனத்தின் பிரபலமான ரெனால்ட் க்விட் மாடலின் மேம்பட்ட ரகமாக இது உருவாக்கப்பட்டுள்ளது. இதில் இருக்கை வசதியானது பயணிகளின் வசதிக்கேற்ப மாற்றி அமைக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இது 3 சிலிண்டர் மற்றும் 1 லிட்டர் என்ஜினைக் கொண்டது. இதில் 5 கியர்கள் மேனுவல் டிரான்ஸ் மிஷன் மற்றும் ஆட்டோமேடிக் ஆப்ஷனுடன் வருகிறது .
மேலும் , புதிய டிரைபர் காரில் ப்ரோஜெக்டர் ஹெட்லேம்ப்கள், எல்.இ.டி. ஃபாக் லேம்ப்கள், க்ரோம் ஸ்டட் கிரில் போன்றவை கொடுக்கப்பட்டுள்ளது . இதன் உள்புறம் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், பெரிய தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆப்பிள் கார் பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ கனெக்டிவிட்டி ஆகியவை வழங்கப்பட்டுள்ளது.