கொரோனா குறித்து இளைஞர்கள் மிகவும் தவறான நம்பிக்கை கொண்டுள்ளதாக டெல்லி ஆம் ஆத்மி எம்.எல்.ஏ கூறியுள்ளார்.
டெல்லியில் கிரேட்டர் கைலாஷ் தொகுதியில் எம்எல்ஏவாக உள்ள சவுரப் பரத்வாஜ்க்கு கடந்த ஏப்ரல் 12ஆம் தேதி கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இதனையடுத்து மிகவும் மோசமான நிலையை அடைந்த இவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து நுரையீரல் மிகவும் மோசமான நிலையை அடைந்தால் சுவாசிப்பதில் சிரமம் ஏற்பட்டு உடனடியாக ஆக்சிஜன் கொடுக்கப்பட்டுள்ளது.
மேலும் மருத்துவமனையில் ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்ட நிலையில் ஆக்சிஜன் தேவை என உதவி கேட்ட வீடியோவானது இணைய தளத்தில் மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் 47 வயதான சவுரப் பரத்வாஜ்க்கு அளித்த தீவிர சிகிச்சையில் கொரோனாவில் இருந்து மீண்டு பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்.
இதனையடுத்து கொரோனாவின் 2ஆம் அலை மிகவும் மோசமானது என்றும், கொரோனா விஷயத்தில் இளைஞர்கள் மிகவும் தவறான எண்ணத்தைக் கொண்டுள்ளனர் என்றும் அவர் கூறியுள்ளார். ஏனெனில் கொரோனா இளைஞர்களுக்கு எளிதில் வந்து ஆபத்தை அளிக்காது என்று தவறான நம்பிக்கை கொண்டுள்ளனர். எனவே இளைஞர்கள் அனைவரும் மிகவும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என சவுரப் பரத்வாஜ் கூறியுள்ளார்.