நடிகர் அஜித்தின் மனைவி ஷாலினி மற்றும் மச்சினிச்சி ஷாமிலி இருவரும் மாடர்ன் உடையில் எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் அஜித் கடந்த 2000-ஆம் ஆண்டு நடிகை ஷாலினியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அனுஷ்யா என்ற மகளும், ஆத்விக் என்ற மகனும் உள்ளனர். சமீபத்தில் நடிகர் அஜித் தனது பிறந்தநாளை தனது குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக கொண்டாடினார்.
மேலும் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது நடிகர் அஜித் தனது மனைவி ஷாலினியுடன் எடுத்துக்கொண்ட அழகிய புகைப்படம் ஒன்று வெளியாகி இணையத்தில் வைரலானது. இந்நிலையில் ஷாலினி மற்றும் அவரது தங்கை ஷாமிலி இருவரும் மாடர்ன் உடையில் போஸ் கொடுத்த புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. அஜித்தின் மனைவி மற்றும் மச்சினிச்சி இருவரும் ஸ்டைலிஷ் லுக்கில் இருக்கும் இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.