Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

அவர்களோட சேர்ந்துட்டு… கொலை மிரட்டல் விடுத்த காதலர்… இளம்பெண்ணின் பரபரப்பு புகார்…!!

திருமணம் செய்வதாக கூறி இளம்பெண்ணை வாலிபர் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள காரமடை பகுதியில் 24 வயது இளம்பெண் ஒருவர் வசித்து வருகிறார். இந்த இளம்பெண் துடியலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் கடந்த 2019ஆம் ஆண்டு முதல் காரமடை பகுதியில் வசிக்கும் நிர்மல் குமார் என்பவர் இந்த இளம்பெண்ணை காதலித்துள்ளார். இந்நிலையில் நிர்மல்குமார் இளம்பெண்ணை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி அவரை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

அதன்பின் அந்த இளம் பெண் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு நிர்மல்குமாரை வற்புறுத்தியதற்கு அவர் மறுப்பு தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து நிர்மல் குமார் தனது சகோதரர் கோபிநாத் மற்றும் தாய் செல்வி போன்றோருடன் இணைந்து இளம்பெண்ணை தகாத வார்த்தைகளால் திட்டியதோடு, அவருக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். எனவே சட்டப்படி நிர்மல் குமார் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என இளம்பெண் அந்த புகாரில் குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து அவர்கள் 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |