திருவாரூர் மாவட்டத்தில் குளிர்ந்த காற்றுடன் பரவலாக மழை பெய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் மக்கள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் திருவாரூர் மாவட்டத்திலுள்ள மூவாநல்லூர், பரவாக்கோட்டை, மன்னார்குடி உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் அக்னி நட்சத்திரம் தொடங்கிய நாளில் குளிர்ந்த காற்றுடன் பரவலாக மழை பெய்துள்ளது.
இதனையடுத்து ஒரு மணி நேரம் பெய்த மழையால் சாலையில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் அப்பகுதிகளில் பயிரிடப்பட்டுள்ள உளுந்து, நிலக்கடலை உள்ளிட்ட பயிர்களுக்கு மிகுந்த பயனுள்ளதாக மழை பெய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.