14வது ஐபிஎல் தொடரில் வீரர்களுக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டதால், போட்டி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
14வது ஐபிஎல் தொடர் கடந்த மாதம் 9ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வந்தது. ஆனால் கொல்கத்தா மற்றும் சென்னை அணி வீரர்களுக்கு முதலில் தொற்று பாதிப்பு ஏற்பட்டது.இதன்பிறகு ஒரு சில வீரர்களுக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டதால், ஐபிஎல் போட்டி காலவரையின்றி ஒத்தி வைப்பதாக பிசிசிஐ அறிவித்தது. இந்நிலையில் கொல்கத்தா அணியின் இடம்பெற்றிருந்த ஆஸ்திரேலிய வீரரான பேட் கம்மின்ஸ், பாதியிலேயே போட்டி நிறுத்தியதை பற்றி கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறும்போது, தொற்று பாதிப்பு நேரத்தில் இந்தியாவில் இருந்தபோது, ‘பாதுகாப்பு இல்லாமல் இருப்பதாக நான் கருதியது இல்லை’. ஆனால் பயோ பயுள் பாதுகாப்பு வளையத்திற்குள் இருந்ததால் , இந்திய மக்களுக்கு உதவி செய்ய முடியாத நிலையை எண்ணி நான் வருந்தினேன்.
இதற்கு முன்பாக ஐபிஎல் போட்டிக்கு ஆதரவாகவும், எதிர்ப்பு தெரிவித்தும் சிலர் தங்களது கருத்துக்களை தெரிவித்து வந்தனர். ஆனால் என்னை பொறுத்தவரை ஐபிஎல் போட்டி நடைபெற்றது, தேவையான ஒன்றுதான். ஏனெனில் இந்திய மக்கள் அனைவரும் ,கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு ஊரடங்கு நேரத்தில் இருக்கும்போது ,ஐபிஎல் தொடரை பார்த்து தங்களுடைய கவலைகளை சிறிது நேரத்திற்கு மறந்து விடுகின்றனர். அதோடு இரவு நேரங்களில் ஐபிஎல் தொடர் நடப்பதால், மக்களை வீட்டிற்குள் இருக்க வைக்க அது மிகப்பெரிய உதவியாக இருந்தது என்று பேட் கம்மின்ஸ் தெரிவித்துள்ளார். இவர் இந்தியாவின் கொரோனா தொற்று பாதிப்பிற்கு நிதியுதவி அளித்துள்ளார், என்பது குறிப்பிடத்தக்கது.