நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் நடிகை காயத்ரியின் குடும்ப புகைப்படம் வெளியாகியுள்ளது.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது . இந்த சீரியலில் மிர்ச்சி செந்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். இவர் இதற்குமுன் விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிய சரவணன் மீனாட்சி சீரியலில் நடித்து பிரபலமடைந்தவர் . மேலும் இவர் மாப்பிள்ளை உள்ளிட்ட சில சீரியல்களிலும் நடித்துள்ளார் .
நாம் இருவர் நமக்கு இருவர் சீசன் 1 வெற்றியை தொடர்ந்து தற்போது நாம் இருவர் நமக்கு இருவர் சீசன் 2 தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த சீரியலில் மிர்ச்சி செந்திலுக்கு தங்கையாக நடித்து வரும் மூன்று பேரில் ஒருவர் நடிகை காயத்ரி. இவர் இதற்கு முன் வாணி ராணி, சரவணன் மீனாட்சி உள்ளிட்ட சீரியல்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் . இந்நிலையில் நடிகை காயத்ரி தனது கணவர் மற்றும் மகனுடன் எடுத்துக்கொண்ட அழகிய புகைப்படம் வெளியாகியுள்ளது.