Categories
தேசிய செய்திகள்

”ஜம்முவில் மீண்டும் இணைய சேவை” தளர்க்கப்படும் கட்டுப்பாடுகள்…!!

ஜம்மு உள்ளிட்ட பகுதிகளில்  இணையதளசேவை மீண்டும்  கொடுக்கப்பட்டுள்ளது.

காஷ்மீருக்கு வாழங்கப்பட்டு இருந்த சிறப்பு அந்தஸ்து 370-வது சட்டப்பிரிவை மத்திய அரசு இரத்து செய்து அதன் மசோதாவை மாநிலங்களவை மற்றும் மக்களவையில் நிறைவேற்றியது. இதையடுத்து காஷ்மீர் மாநிலம் இரண்டு  யூனியன் பிரதேசங்களாக  மாறியது. இதனால் அங்கு நடக்கும் வன்முறை சம்பவங்களை கட்டுப்படுத்தும் நோக்கோடு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஜம்மு காஷ்மீர் பகுதிகளில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

Image result for இணைய சேவை

அங்குள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இந்த மசோதா நிறைவேற்றுவதற்கு முன்னதாக விடுமுறை அளிக்கப்பட்ட்து. 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட்து. வன்முறையாளர்கள் வதந்தியை பரப்பாமல் இருக்க தொலை தொடர்பு மற்றும் இணையதள சேவை முடக்கப்பட்டது. இந்நிலையில் காஷ்மீரில் இயல்பு நிலை திரும்பி வருவதை தொடர்ந்து கட்டுப்பாடுகள் கொஞ்சம் கொஞ்சமாக தளர்க்கப்பட்டு வருகின்றது.அங்குள்ள  ஜம்மு, சம்பா, கதுவா, உதாம்பூர் ஆகிய பகுதிகளில் மீண்டும் 2 G இணையதள சேவை  வழங்கப்பட்டுள்ளது.

Categories

Tech |