தனியார் மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை எடுத்துக்கொள்ளும் நோயாளிகளிடம் இருந்து 2 லட்சம் வரை ரொக்க பணமாக வசூலிக்கவேண்டும் என மத்திய அரசு அனுமதி உத்தரவிட்டுள்ளது.
இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்துக்கொண்டு வருகின்றது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. மேலும் தனியார் மருத்துவமனைகளிலும் கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். மருத்துவமனைகளில் சிகிச்சை கட்டண வசூலிப்பு தொடர்பாக மத்திய மாநில அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை கொண்டு வந்துள்ளது. அதன்படி சிகிச்சைக்காக வசூலிக்கப்படும் கட்டணத்தில் 2 லட்சம் வரை ரொக்கப் பணமாக வசூலிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.
2 லட்சத்துக்கும் அதிகமான கட்டணம் இருந்தால் மட்டுமே ஆன்லைனில் வாங்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. ஏனெனில் கிராமங்களில் இருக்கும் பலருக்கும் ஆன்லைன் சேவை என்பது தெரியாத ஒன்றாக உள்ளது. இதன் காரணமாக 2 லட்சம் வரை தொகையாக பெறவேண்டும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. மேலும் யார் பணம் செலுத்துகிறார்கள், எந்த நோயாளிக்கு பணம் செலுத்துகிறார்கள் போன்ற விவரங்களும் பதிவு செய்ய வேண்டுமென்று தெரிவித்துள்ளது. மேலும் இந்த உத்தரவு இந்த மாத இறுதி வரை அமலில் இருக்கும் எனவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.