தமிழகத்தில் மே 16ஆம் தேதி முதல் ஆவின் பால் விலை லிட்டருக்கு 3 ரூபாய் குறைக்கப்படும் என்று அறிவிப்பு அமலுக்கு வருகின்றது.
தமிழகத்தில் முதல்வராக மு க ஸ்டாலின் நேற்று பதவியேற்றுக் கொண்டார். பதவியேற்றவுடன் 5 முக்கிய திட்டங்களை செயல்படுத்த கோப்புகளில் கையெழுத்திட்டார். அதில் ஆவின் பால் விலை லிட்டருக்கு 3 ரூபாய் குறைப்பு, மாநகராட்சி பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பேருந்து வசதி, ரேஷன் அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரண நிதியாக நான்காயிரம் போன்ற ஐந்து திட்டங்களுக்கு கையெழுத்திட்டார். அதன்படி, கொரோனா நிவாரண நிதியாக அறிவிக்கப்பட்ட நாலாயிரத்தில் முதலில் 2000 திங்கள்கிழமை முதல் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து தற்போது ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூபாய் 3 குறைத்து விலை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த விலை குறைப்பு மே 16 ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. அதன்படி, சமன் படுத்தப்பட்ட பால் ஒரு லிட்டர் ரூபாய் 43 க்கு பதில் ரூபாய் 40 க்கும், இரு முறை சமன் படுத்தப்பட்ட ஒரு அரைலிட்டர் பால் 21க்கு பதில் ரூ.18.50க்கும், நிலைப்படுத்தப்பட்ட பால் ரூ.23.50க்கு பதில் ரூ.22க்கும், நிறை கொழுப்பு பால் ரூ. 25.50க்கு பதில் ரூபாய் 24 க்கும் விற்பனை செய்யப்படும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.