Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

இரண்டு வாரங்களுக்கு ஊரடங்கு நீட்டிப்பு – அரசு புதிய உத்தரவு…!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதனால் ஞாயிறு ஊரடங்கு, இரவு ஊரடங்கு உள்ளிட்ட ஊரடங்கு நடவடிக்கைகளும், கொரோனா  கட்டுப்பாட்டு நடவடிக்கைகளும் கடமையாக்கப்பட்டு வருகிறது. நாளுக்கு நாள் இறப்பு வீதங்கள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் அதிகரிப்பதால் மருத்துவமனைகளில் கூட இடமில்லாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக கொரோனா நோயாளிகள் உயிரிழந்து வருகின்றனர். எனவே  தமிழகத்தில் ஆக்சிஜனை உற்பத்தி ஆலைகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் நேற்று ஒரே நாளில் கொரோனா பாதிப்பு 27 ஆயிரத்து நெருங்கிய நிலையில் தமிழகத்தில் வருகிற மே 10 ஆம் தேதி முதல் 24-ம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதேபோல புதுச்சேரியிலும் தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்காக மே 10 வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில் புதுச்சேரி அரசு மே-24 ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது. மளிகை, காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய கடைகள் மதியம் 12 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதி. 50% பேருந்துகள் இயங்கும்.

Categories

Tech |