Categories
மாநில செய்திகள்

இப்படி இல்லனா… “ரொம்ப சிக்கலாகிடும்”….. உடனே இதை செய்யுங்க…நாம தப்பிச்சுக்கலாம்…. ஸ்டாலின் அட்வைஸ்….!!

தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் பேசியதாவது, .

ஊரடங்கு கட்டுப்பாடுகள் போடாமல் கொரோனாவை கட்டுப்படுத்த இயலாது என்கிற சூழலில், பத்தாம் தேதி முதல் 24ஆம் தேதி வரை தமிழகத்தில் முழு ஊரடங்கு காலமாக அறிவிக்கப்படுகின்றது. பால், மருத்துவமனைகள், மருந்து கடைகள், பத்திரிக்கைகள், வேளாண்மை விற்பனை மையங்கள் நீங்களாக மற்ற சேவைகள் இருக்காது. பலசரக்கு, காய்கறி கடைகள், இறைச்சி கடைகள் மதியம் 12 மணி வரை மட்டுமே இயங்கலாம். சாலையோர காய்கறி, பூ கடைகளுக்கு அனுமதி உண்டு. மற்ற கடைகளுக்கு அனுமதி இல்லை. உணவகங்களில் பார்சல் சேவை மட்டுமே உண்டு. இதனால் ஏழை எளிய மக்களுக்கு வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்பது உண்மைதான்.

ஊரடங்கு காலமாக அறிவிக்கவில்லை என்றால் கொரோனவை கட்டுப்படுத்துவது என்பது சிரமமானதாக ஆகிவிடும். இதை உணர்ந்து அருகில் உள்ள கேரளா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் ஊரடங்கு சட்டத்தை அமுல்படுத்தி இருக்கிறார்கள். தமிழக அரசும் ஊரடங்கு சட்டத்தை அமல்படுத்தியுள்ளது. இந்த 14 நாட்களும் ஊரடங்கு கட்டுப்பாட்டை பயன்படுத்தி நாட்டு மக்கள் அனைவரும் கட்டுப்பாடாக இருந்தால் தொற்று பாதிப்பில் இருந்து தப்பிக்கொள்ளலாம் என ஸ்டாலின் கூறினார்.

Categories

Tech |