தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் கூறுகையில், .
கொரோனா தொற்று பரவல் தொடர்பாக நேற்று மூன்று மணி நேரத்திற்குமேல் மாநிலத்தில் இருக்கின்ற முக்கிய அரசு செயலாளர்கள், மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை அதிகாரிகள், மருத்துவ நிபுணர்களோடு நான் ஆலோசனை நடத்தினேன்.
அதிகாரிகள் கூட்டத்தில் நான் ஒன்றை குறிப்பிட்டு சொன்னேன். கொரோனா பரவல் குறித்த முழு உண்மையை சொல்லுங்கள் என்று கேட்டுக் கொண்டேன். உண்மையை நேருக்கு நேராக சந்திக்க வேண்டும் என்று நான் சொன்னேன். அந்த வகையில் கொரோனா என்கின்ற பெரும் தொற்றுக்கு எதிராக நமது நடவடிக்கைகள் இன்று முதல் வேகமெடுத்து இருக்கின்றது. அரசின் உத்தரவுக்கு கட்டுப்பட்டு நீங்கள் எல்லோரும் நடக்க வேண்டுமென்று மன்றாடி கேட்டுக்கொள்கிறேன். நம்மையும் நாட்டு மக்களையும் காப்போம். கொரோனா தொற்றில் இருந்து தமிழகத்தை மீட்போம் என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.