வேலூரில் தொடர்ச்சியாக நடைபெற இருந்த குழந்தை திருமணத்தை சைல்டுலைன் அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர்.
வேலூர் மற்றும் சில மாவட்டங்களில் நடக்கும் குழந்தை திருமணத்தை தடுப்பதற்கான நடவடிக்கைகளில் சைல்டுலைன் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் சைல்டுலைன் அமைப்பு அலுவலர்கள் குழந்தை திருமணம் செய்வதால் ஏற்படும் பாதிப்பு குறித்து விழிப்புணர்வு நடத்திவருகின்றனர். ஆனாலும் சில இடங்களில் 18 வயது பூர்த்தியாகாத சிறுமிக்கு திருமணம் செய்யும் சம்பவம் இன்னும் நடைபெற்று வருகின்றது. இதுகுறித்து மாவட்ட சைல்டுலைன் எண் 1098 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு மொத்தம் 107 குழந்தை திருமணம் நடைபெற இருப்பதாக தகவல் கிடைத்தது.
அந்த தகவலின்படி 73 குழந்தை திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து 17 குழந்தைகளுக்கு ஏற்கனவே திருமணம் முடிந்ததால் அவர்களை அங்கிருந்து மீட்டு குழந்தைகள் நலகுழுமத்தில் ஆஜர்படுத்தி பின்பு பெற்றோர்களிடம் ஒப்படைத்து விட்டனர். எனவே மீதமிருக்கும் ஒன்பது அழைப்புகளில் 5 சிறுமிகள் 18 வயதிற்கு மேல் இருப்பவர்கள் என்று கூறியுள்ளனர். மேலும் மூன்று சிறுமிகள் சரியான முகவரியை கொடுக்காததால் திருமணம் தடுக்க முடியவில்லை என்று லைல்டுலைன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.