மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் கூலி தொழிலாளி பலியான சம்பவம் சோகத்தை ஏற்பத்தியுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள இந்திரா நகரில் கூலி தொழிலாளியான ரவி என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் ரவி தனது மோட்டார் சைக்கிளில் பிச்சைவாடி பகுதிக்கு சென்றுவிட்டு இந்திராநகர் திரும்பிக் கொண்டிருக்கும் போது பின்புறமாக வேகமாக வந்த லாரி இவரின் மோட்டார் சைக்கிள் மீது மோதிவிட்டது.
இந்த விபத்தில் படுகாயம் அடைந்து ரவியை சாலையோரம் சென்றவர்கள் மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர். ஆனால் அங்கு அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி ரவி பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பி ஓடிய லாரி டிரைவரை வலை வீசி தேடி வருகின்றனர்.