24 மணி நேர குடிநீர் விநியோகத் திட்டத்திற்கான ராட்சத குழாய்கள் பதிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று கொண்டிருக்கிறது.
கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள தண்டுமாரியம்மன் கோவில் பக்கத்தில் இருந்து கலெக்டர் அலுவலகம் வழியாக கோவை அரசு மருத்துவமனை வரை 850 மீட்டருக்கு 24 மணி நேர குடிநீர் வினியோக திட்டத்திற்காக ராட்சத குழாய்கள் பதிக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறும்போது, எந்த நேரமும் போக்குவரத்து அதிகமாக காணப்படும் இடமாக கோவை கலெக்டர் அலுவலகம் மற்றும் ரயில் நிலைய பகுதி அமைந்துள்ளது.
ஆனால் தற்போது கடைகள் மதியம் 12 மணிக்கு மேல் செயல்பட தடை விதிக்கப்பட்டுள்ளதால் போக்குவரத்து குறைந்துள்ளதாகவும், இந்த நேரத்தை பயன்படுத்தி 800 மில்லி மீட்டர் விட்டம் உள்ள புதிய குடிநீர் குழாய்கள் பதிக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளனர். இதனை அடுத்து கேபிள் வயர்களை கொண்டு செல்வதற்கு ஏதுவாக காலி குழாய்களும் பதிக்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளனர். இந்தப் பணிகள் விரைவில் முடிப்பதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அதிகாரிகள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.