Categories
கிரிக்கெட் விளையாட்டு

‘அடேங்கப்பா இவ்வளவு ரூல்ஸா’ …! இந்திய வீரர்களுக்கு, பிசிசிஐ போட்ட ரூல்ஸ் லிஸ்ட் …!!!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்காக, இங்கிலாந்துக்கு செல்லும் இந்திய வீரர்களுக்கு, பிசிசிஐ பாதுகாப்பு நடைமுறைகளை  வெளியிட்டுள்ளது .

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில்,இந்தியா- நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. இந்த டெஸ்ட் போட்டி வருகின்ற ஜூன் 18ஆம் தேதி முதல் தொடங்கி 22ம் தேதி வரை இங்கிலாந்தில் ஹாம்ப்சைர் ஸ்டேடியத்தில் நடைபெற இருக்கிறது. எனவே இந்தப் போட்டியில் இந்திய அணி வீரர்களின் பட்டியலை பிசிசிஐ முன்பே அறிவித்தது. இந்நிலையில் வீரர்கள் பயணத் திட்டத்தைப் பற்றி பிசிசிஐ வெளியிட்டுள்ளது . இதில் போட்டி நடைபெறுவதற்கு முன்பாக இந்திய வீரர்கள் இந்தியாவில் 8 நாட்கள், அதன் பிறகு இங்கிலாந்தில் 10 நாட்கள் என  மொத்தமாக 18 நாட்கள் அனைவரும் குவாரண்டைனில் இருக்க வேண்டும். இதன்பிறகு மே 25ஆம் தேதிக்குள் இந்திய வீரர்கள் ,பிசிசிஐ-யின் பயோ பபுள் வளையத்திற்குள் வந்துவிடுவார்கள்.

இதன் பிறகு ஜூன் 2ம் தேதி தனி விமானம் மூலம், இங்கிலாந்துக்கு செல்லும் இந்திய வீரர்கள் அங்கு ஜூன் 12-ஆம் தேதி முதல் , அந்நாட்டின் பயோ பபுளில்  தங்க வைக்கப்படுவார்கள். நியூசிலாந்துடனான போட்டி முடிவடைந்ததும், அடுத்து இங்கிலாந்துடனான  டெஸ்ட் போட்டியில், இந்திய அணி மோதுகிறது. இங்கிலாந்துடனான டெஸ்ட் போட்டி வருகின்ற ஆகஸ்ட் 4 ஆம் தேதி முதல் தொடங்கி செப்டம்பர் 14 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. எனவே நீண்ட நாள்  பயணமாக இருப்பதால், வீரர்கள் தங்களது குடும்பத்தினரையும் உடன் அழைத்து வரலாம் என்று பிசிசிஐ அறிவித்துள்ளது. இதைத்தொடர்ந்து  வீரர்கள் இந்தியாவில், முதல் டோஸ் தடுப்பூசியை போட்டுக் கொள்ள உள்ளனர் . பிறகு இரண்டாவது டோஸ் தடுப்பு ஊசியை , இங்கிலாந்தில் செலுத்திக் கொள்வதற்காக பிசிசிஐ பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.  இதற்கு இங்கிலாந்து மறுப்பு தெரிவித்தால், இந்தியாவிலிருந்து தடுப்பூசிகள் எடுத்துச்செல்லப்பட்டு வீரர்களுக்கு செலுத்தப்படும் என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது.

Categories

Tech |