நடிகர் விஜய் நிகழ்ச்சி ஒன்றில் எமோஷனலாக பேசிய பழைய வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது .
தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் விஜய்க்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து வசூலில் மிகப்பெரிய அளவில் சாதனை படைத்து வருகிறது. மாஸ்டர் படத்தின் வெற்றிக்கு பிறகு நடிகர் விஜய் தளபதி 65 படத்தில் நடித்து வருகிறார். இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கும் இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
https://twitter.com/VijayGeek/status/1390951885725519872
முன்பெல்லாம் நடிகர் விஜய் அடிக்கடி தொலைக்காட்சியில் பேட்டிகள் கொடுப்பார், தனது ரசிகர்களை சந்தித்து விட்டு செல்வார். ஆனால் தற்போது பட இசை வெளியீட்டு விழாவில் மட்டுமே கலந்து கொள்கிறார். இந்நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நிகழ்ச்சி ஒன்றில் நடிகர் விஜய் கலந்து கொண்டிருந்த வீடியோ ஒன்று வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது . அதில் பேசிய விஜய் ‘நான் சினிமாவுக்கு வரும்போது என் படங்கள் ஓரளவுக்கு ஓடுனா போதும் என நினைத்து தான் வந்தேன்’ என்று எமோஷனலாக கூறுகிறார்.