Categories
உலக செய்திகள்

மோதி பாக்காதீங்க ”எங்களை வெல்ல முடியாது” வட கொரிய அதிபர் பெருமிதம்..!!

எங்கள் நாட்டின் இராணுவம் யாராலும் வெல்ல முடியாத திறன்களைப் பெற்று விளங்குவதாக வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் பாராட்டியுள்ளார்.

அமெரிக்காவுடன் இணைந்து தென் கொரியா கொரிய தீபகற்பத்தில் கூட்டுப் பயிற்சியில் ஈடுபட்டு வருவது தங்கள் நாட்டின் மீது தாக்குதல் நடத்துவதற்கான அறிகுறி என்று வடகொரியா எச்சரித்து வருகின்றது. மேலும் இவர்களின் ராணுவ கூட்டுப் பயிற்சியை எச்சரிக்கும் விதமாக அணு ஆயுத சோதனை , ஏவுகணையை ஏவுதல் என்று தொடர்ந்து வடகொரியா ஈடுபட்டு , அமெரிக்காவின் எச்சரிக்கையையும் கண்டு கொள்ளாமல் இருப்பது வாடிக்கையாகி விட்டது.

Image result for Bolton plays down North Korean missile launches as Pyongyang boasts of new weapons

இந்நிலையில் நேற்று நடந்த கூட்டுப் பயிற்சியின் போது வடகொரியா. புதிய ரக ஆயுதம் ஒன்றை விண்ணில் செலுத்தி சோதனை செய்தது. வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் மேற்பார்வையில் நடைபெற்ற இந்த சோதனையில் ராணுவத்தின் செயல்பாடுகள் மிகவும் திருப்திகரமாக உள்ளதாகவும், யாராலும் வெல்ல முடியாத திறன்களைப் பெற்று விளங்குவதாகவும், தங்கள் நாட்டு ராணுவம் ரகசியமாக , அற்புதமாக ஆயுதச் சோதனை நடத்தியதாக அதிபர் கிம் ஜாங் உன் பாராட்டியுள்ளார்.

Categories

Tech |