உடல்நிலை சரியில்லாத விரக்தியில் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மேல் கோட்டை பகுதியில் சுமித்ரா என்ற பெண் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் சுமித்ராவின் உடல் நலம் திடீரென பாதிக்கப்பட்டதால் பல்வேறு மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்றுள்ளார். ஆனாலும் இவரது உடல் நிலையில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படாமல் இருந்ததால் சுமித்ரா மன உளைச்சலில் இருந்துள்ளார்.
இதனையடுத்து திடீரென தனது வீட்டில் சுமித்ரா தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்த தேன்கனிக்கோட்டை காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற அவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.