சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்பத்தூரில் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்த விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் கொரோனா தடுப்பு நடவடிக்கை குழு முன்கள பணியாளர்கள் மற்றும் கொசுப்புழு ஒழிப்பு பணியாளர்களுக்கு விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தினை வட்டார வளர்ச்சி அலுவலர் ஜஹாங்கீர் தலைமை தாங்கி நடத்தி வைத்தார். மேலும் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் செந்தில்குமார் அந்தக் கூட்டத்தில் முன்னிலை வகித்தார். அந்தக் கூட்டத்தில் கிராமங்களுக்கு சென்று முன் களப்பணியாளர்கள் எவ்வாறு செயல்படவேண்டும்.
மேலும் காய்ச்சல், சளி, இருமல் ஆகியவை உள்ள நபர்களை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்து வட்டார வளர்ச்சி அலுவலர் ஜஹாங்கீர் விளக்கமளித்தார். அதில் முன் களப்பணியாளர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். மேலும் சுகாதார ஆய்வாளர்கள் ராஜாராம், கோபாலகிருஷ்ணன், சோலையப்பன் ஆகியோரும் அந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.