மின்சாரம் தாக்கி வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி மாவட்டத்திலுள்ள களப்பாகுளம் பகுதியில் சுப்பிரமணியன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு கேரளாவில் வேலை செய்து கொண்டிருந்த உடையார் சாமி என்ற மகன் இருந்துள்ளார். கேரளாவில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் அங்குயிருந்து உடையார் சாமி தனது சொந்த ஊருக்கு சென்றுவிட்டார். இந்நிலையில் உடையார் சாமி தனது வீட்டின் அருகில் துணிகளைத் துவைத்துக் கொண்டிருந்தார். அப்போது திடீரென மழை பெய்ய ஆரம்பித்துள்ளது.
இதனால் உடையார் சாமி துவைத்த துணிகளை அங்குள்ள ஓயரில் கட்டப்பட்டு இருந்த கயிற்றின் மீது அவசர அவசரமாக காயப் போட்டுக் கொண்டிருந்தார். அப்போது அவர் மீது திடீரென மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டதில் உடையார் சாமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதனையடுத்து அருகில் இருந்தவர்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தார்கள். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடையார் சாமியின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.