Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

இப்படி நடப்பது சகஜம் தானே… மகன் எடுத்த விபரீத முடிவு… குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

குடும்ப தகராறு காரணமாக கரையானுக்கு அடிக்கும் பூச்சி மருந்தை சாப்பிடு ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அரியலூர் மாவட்டம் பொய்யாநல்லூர் பகுதியில் செல்வமணி என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு கூலித் தொழிலாளியான வேல்முருகன் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் வேல் முருகனுக்கும் அவரது தந்தைக்கும் இடையே குடும்ப பிரச்சனையால் அடிக்கடி தகராறு ஏற்பட்டு உள்ளது. இதனால் வேல்முருகன் மிகுந்த மன வருத்தத்துடன் இருந்துள்ளார். இதனையடுத்து வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் வேல்முருகன் கரையானுக்கு  அடிக்கும் பூச்சி மருந்தை எடுத்து சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதனையடுத்து அருகில் இருந்தவர்கள் விரைந்து சென்று  மயக்க நிலையில் கிடந்த வேல்முருகனை உடனடியாக மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அங்கு அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனளிக்காமல் வேல்முருகன் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் மருத்துவமனைக்கு விரைந்து சென்று வேல்முருகனின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |