Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

சொல்றத கேட்க மாட்டீங்களா… அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை… பின்பற்றப்படும் தீவிர கட்டுப்பாடுகள்…!!

கொரோனா கட்டுப்பாடு நடவடிக்கைளை மீறி செயல்பட்ட கடைகளுக்கு அதிகாரிகள் அபராதம் விதித்து பூட்டி சீல் வைத்தனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கொரோனா அதிவேகமாக பரவி வரும் காரணத்தால் அதனை கட்டுப்படுத்தும் விதமாக மாவட்ட நிர்வாகம் பல்வேறு கட்டுப்பாடுகளை செயல்படுத்தி வருகிறது. இந்நிலையில் மாவட்டம் முழுவதும் பல துறைகளை சேர்ந்த அதிகாரிகள் பொதுமக்கள் கொரோனா தொற்றின் புதிய கட்டுப்பாடுகளை பின்பற்றுகிறார்களா என்று ஆய்வு செய்வதோடு, அரசு அறிவித்த கட்டுப்பாடுகளை மீறி செயல்பட்ட கடைகளுக்கு அபராதம் விதித்து பூட்டி சீல் வைத்து வருகிறார்கள். இதனையடுத்து கொரோனா  தொற்று கட்டுப்பாட்டை மீறி மந்தைவெளி செயல்பட்டு வரும் ஷாப்பிங் மால்கள், ஜெராக்ஸ் கடைகள் மற்றும் டீ கடைகள் உள்ளிட்ட 20 கடைகளை அதிகாரிகள் பூட்டி சீல் வைத்ததோடு அந்த கடை உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

அதேபோல் சங்கராபுரம் சாலைப் பகுதியில் திறந்திருந்த செருப்பு கடையையும், பேருந்து நிலையத்தில் திறந்து வைத்திருந்த ஏஜென்ட் கடையையும் தாசில்தார் தலைமையிலான வருவாய்த்துறை அதிகாரிகள் கடைகளை பூட்டி சீல் வைத்துள்ளனர். இதனைத் தொடர்ந்து மூங்கில்துறைப்பட்டு பகுதியில் உள்ள புதுப்பட்டியில் கொரோனா தொற்று கட்டுப்பாட்டை மீறி திறந்து வைத்து இருந்த தையல் கடைகள் மற்றும் மளிகை கடைகளை வடபொன்பரப்பி சப்-இன்ஸ்பெக்டர் ஜெயச்சந்திரன், கிராம நிர்வாக அலுவலர் கோபி ஆகியோர் அந்த கடைகளை பூட்டி சீல் வைத்தனர்.

Categories

Tech |