தமிழகத்தை தரணியிலே தலைசிறந்த வாழ்விடமாக மாற்றிக் காட்ட வேண்டும் என்பதே என் சூளுரை என்று முதல்வர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பெரும்பான்மை தொகுதிகளை கைப்பற்றி திமுக ஆட்சி அமைத்துள்ளது. திமுக கட்சியின் தலைவர் மு க ஸ்டாலின் முதல்வராக பதவி ஏற்றுள்ளார். பதவியேற்றவுடன் முக்கியமான 5 கோப்புகளில் கையெழுத்திட்டு தனது பணியை சிறப்பாக தொடங்கியுள்ளார். அவர் கையெழுத்திட்ட 5 திட்டங்களும் தமிழக மக்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் நேர்மையான, தூய்மையான ஆட்சி நடத்துவேன் என்று முதல்வர் முக ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார். தமிழ் பண்பாட்டை மீண்டும் துளிர்க்க செய்வதும், நம் பொருளாதாரத்தை முன்னேற்றமடைய செய்வதுமே நமது ஆட்சியின் நோக்கம். ஆட்சிப் பொறுப்பு என்பது மலர் மஞ்சமல்ல. தமிழகத்தை தரணியிலேயே தலைசிறந்த வாழ்விடமாக மாற்றி காட்டுவதே என் சூளுரை என்று முதல்வர் முக ஸ்டாலின் கூறியுள்ளார்.