Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

பேருந்தில் ஒட்டப்பட்ட காகிதம்…. மகளிரிடையே வரவேற்ப்பை பெற்ற திட்டம்…. தமிழக முதல்வரின் அதிரடி உத்தரவு….!!

மகளிர் இலவசமாக பேருந்தில் பயணம் செய்யலாம் என்ற திட்டம் பொதுமக்களிடேயே அதிக வரவேற்பு பெற்றுள்ளது.  

தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்ட திரு. முக. ஸ்டாலின் ஐந்து முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டுள்ளார். அவைகளில் ஒன்றான நகரப் பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்நிலையில் திருப்பத்தூரில் இருந்து இயக்கப்படும் 48 நகரப் பேருந்துகளில் மகளிர் இலவசமாக பயணம் மேற்கொள்ளலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் திருப்பத்தூரிலிருந்து பல்வேறு பகுதிகளுக்கு மகளிர் இலவசமாக பயணம் மேற்கொண்டுள்ளனர். மேலும் மகளிர் கட்டணமின்றி பேருந்தில் பயணம் செய்வதற்கு அனுமதி என்று பேருந்துகளில் அச்சிட்டு ஒட்டப்பட்டிருந்தது. இத்திட்டம் பெண்கள் இடையே பெரும் வரவேற்பை பெற்று வருகின்றது.

Categories

Tech |