சீரியல் நடிகர் ஜெய் தனுஷ் தனது மனைவியின் வளைகாப்பு விசேஷத்தில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
சன் தொலைக்காட்சியில் கடந்த சில வருடங்களாக ஒளிபரப்பாகி வரும் சந்திரலேகா சீரியலுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது . இந்த சீரியலில் ஜெய் தனுஷ் கதாநாயகனாகவும், ஸ்வேதா கதாநாயகியாகவும் நடித்து வருகின்றனர் . நடிகர் ஜெய் தனுஷ் மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட பல மொழி சீரியல்களில் நடித்துள்ளார். மேலும் இவர் சீரியல் நடிகை கீர்த்தியை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
சன் டிவியில் ஒளிபரப்பான நந்தினி சீரியலில் நடிகை கீர்த்தி நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த சில மாதங்களுக்கு முன் கீர்த்தி கர்ப்பமாக இருப்பதாக தகவல் வெளியானது. இந்நிலையில் அவருக்கு வளைகாப்பு நடத்தியுள்ளனர். மேலும் நடிகர் ஜெய் தனுஷ் தனது மனைவியுடன் வளைகாப்பு விசேஷத்தில் எடுத்துக்கொண்ட அழகிய புகைப்படம் ஒன்றை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.