Categories
மாநில செய்திகள்

BREAKING: சென்னையில் அதிரடி மாற்றம்… தமிழக அரசு புதிய உத்தரவு…!!!

சென்னை மாநகராட்சி ஆணையராக ககன்தீப் சிங் பேடியை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழக முதல்வராக மே 7 அன்று மு க ஸ்டாலின் பதவி ஏற்றுக்கொண்டார். பதவியேற்றவுடன் பல அதிகாரிகள் தமிழகத்தில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர் . அதில் தமிழக அரசு தலைமைச் செயலாளராக இருந்த ராஜீவ் ரஞ்சன் மாற்றப்பட்டு வெ. இறையன்பு நியமிக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து சென்னை மாநகர காவல் ஆணையர் பலர் மாற்றப்பட்டன. முதலமைச்சருக்கு நான்கு தனி செயலாளர்களும் நியமிக்கப்பட்டு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

தற்போது சென்னை மாநகராட்சி ஆணையராக இருந்த பிரகாஷ் இடமாற்றம் செய்யப்பட்டு, வேளாண் உற்பத்தி ஆணையர் மற்றும் அரசு முதன்மை செயலாளராக இருந்த ககன்தீப்சிங் பேடி இன்று நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை இன்று தமிழக அரசின் தலைமை செயலாளர் வெ இறையன்பு வெளியிட்டார். ககன்தீப்சிங் ஏற்கனவே கடலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் ஆட்சியராக பணியாற்றியுள்ளார். பத்து ஆண்டுகள் பேரிடர் காலங்களில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |