Categories
சினிமா தமிழ் சினிமா

பிரபல நடிகையின் சகோதரர் மற்றும் நடிகர் மரணம்… சோகம்…!!

நடிகை டிஸ்கோ சாந்தி மற்றும் லலிதாகுமாரின் சகோதரரும் நடிகருமான அருண்மொழிவர்மன் இன்று காலமானார்.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்துவரும் இந்த சூழ்நிலையில் பல திரைப்பிரபலங்கள் உயிரிழந்து வரும் சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி வருகின்றது. திரைப்படங்களில் பாடலுக்கு நடனம் ஆடி மிகவும் பிரபலமானவர் டிஸ்கோ சாந்தி. இவர் உதயகீதம் எனும் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார் இதைத்தொடர்ந்து மலையாளம், கன்னடம், தெலுங்கு என பல மொழிகளில் நடித்துள்ளார்.

இவரது சகோதரர் ஒளிப்பதிவாளர் மற்றும் நடிகர் அருண்மொழிவர்மன். இவர் பழம்பெரும் நடிகரான ஆனந்தனின் மகனும் ஆவார். இவர் கடந்த சில தினங்களாக வயிற்று புற்றுநோய் காரணமாக சென்னையில் பிரபல தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தார். இவருக்கு வயது 52. கடந்த மூன்று நாட்கள் உடல் நிலை மோசமாக நிலையில் சிகிச்சை பெற்று வந்தார். பின்னர் சிகிச்சை பலனின்றி இன்று காலை மரணம் அடைந்தார்.

Categories

Tech |