Categories
மாநில செய்திகள்

FLASH NEWS: தமிழகத்தில் இலவசம் – உடனே செய்ய உத்தரவு…!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதனால் ஞாயிறு ஊரடங்கு, இரவு ஊரடங்கு உள்ளிட்ட ஊரடங்கு நடவடிக்கைகளும், கொரோனா  கட்டுப்பாட்டு நடவடிக்கைகளும் கடமையாக்கப்பட்டு வருகிறது. நாளுக்கு நாள் இறப்பு வீதங்கள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் அதிகரிப்பதால் மருத்துவமனைகளில் கூட இடமில்லாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக கொரோனா நோயாளிகள் உயிரிழந்து வருகின்றனர். எனவே  தமிழகத்தில் ஆக்சிஜனை உற்பத்தி ஆலைகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் நேற்று ஒரே நாளில் கொரோனா பாதிப்பு 27 ஆயிரத்து நெருங்கிய நிலையில்  மக்கள் தேவை இல்லாமல் வீட்டை விட்டு  வெளியே சென்றாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அரசு மருத்துவமனைகளில் போதிய படுக்கை வசதிகள் இல்லாததால் தனியார் மருத்துவமனைகளுக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.  இந்நிலையில் தமிழகத்தில் 800 தனியார் மருத்துவமனைகளில் முதல்வர் காப்பீட்டு திட்டத்தின் மூலம் இலவச சிகிச்சை பெறலாம் என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

முதல்வர் காப்பீட்டு திட்டத்தில் இணையாதவர்கள் ரேஷன் கார்டு, ஆதார் ஜெராக்ஸ் ஆகியவற்றைக்கொண்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம். மேலும் இது குறித்த விவரங்கள் தெரிந்து கொள்ள  https://www.cmchistn.com என்ற இணையதளத்திற்கு செல்லலாம் என்று கூறியுள்ளார்.

Categories

Tech |