நடிகர் கமல்ஹாசன் டீன் ஏஜில் தனது அம்மாவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் கமல்ஹாசனுக்கு ரசிகர்கள் ஏராளம். தற்போது இவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘விக்ரம்’ படத்தில் நடித்து வருகிறார். இன்று அன்னையர் தினம் என்பதால் பிரபலங்கள் பலரும் தங்களுடைய அன்னையுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு அன்னையின் பெருமைகளை தெரிவித்து வருகின்றனர்.
என் குழையும் மழலையில் துவங்கி இன்று என் நாவில் புழங்கும் தமிழைப்போலவே நீயும், என்னோடு, எப்போதுமே
நானாகிய நதி மூலமே
தாயாகிய ஆதாரமே pic.twitter.com/O6wSFvfFSZ
— Kamal Haasan (@ikamalhaasan) May 9, 2021
இந்நிலையில் நடிகர் கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் டீன் ஏஜில் தனது அம்மாவுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். மேலும் அதில் ‘என் குழையும் மழலையில் துவங்கி இன்று என் நாவில் புழங்கும் தமிழைப் போலவே நீயும், என்னோடு, எப்போதுமே நானாகிய நதிமூலமே தாயாகிய ஆதாரமே’ என பதிவிட்டுள்ளார் . தற்போது நடிகர் கமல்ஹாசனின் இந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.