Categories
சினிமா தமிழ் சினிமா

‘மீண்டும் ஒரு மங்காத்தா’… சிம்புவின் ‘மாநாடு’ படத்தை பாராட்டிய தயாரிப்பாளர்… வைரலாகும் டுவீட்‌…!!!

சிம்புவின் மாநாடு படத்தை பார்த்த தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் சிம்புவுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். தற்போது இவர் நடிப்பில் இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில் மாநாடு திரைப்படம் தயாராகி வருகிறது. இந்த படத்தில் கல்யாணி பிரியதர்ஷன், எஸ்.ஜே.சூர்யா, பிரேம்ஜி, ஒய்.ஜி.மகேந்திரன், எஸ்.ஏ.சந்திரசேகர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்து டப்பிங் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இந்த படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ‘நானும் சிம்புவும் சேர்ந்து எங்கள் மாநாடு படத்தை பார்த்தோம் . இயக்குனர் வெங்கட் பிரபுவின் கடின உழைப்பு ஒவ்வொரு பிரேமிலும் தெரிகிறது ‌. மங்காத்தா இயக்குனர் மீண்டும் திரில்லிங் மாஸ் எண்டர்டெயினர் படத்தை கொடுத்துள்ளார் . அதற்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். எஸ் ஜே சூர்யாவும் இந்தப் படத்தில் மிக சிறப்பாக நடித்துள்ளார்’ என பதிவிட்டுள்ளார். தற்போது இந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.

Categories

Tech |