Categories
மாநில செய்திகள்

Breaking: தமிழகத்தில் சற்றுமுன்…. முதல்வர் ஸ்டாலின் புதிய உத்தரவு….!!!!

தமிழகத்தில் கடந்த ஒரு மாதமாக கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருவதால் இரவு நேர ஊரடங்கு மற்றும் வார இறுதி நாட்களில் ஊரடங்கு உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதுமட்டுமன்றி பகல் 12 மணி வரை மட்டுமே கடைகள் செயல்பட அனுமதிக்கப்பட்டு அந்தக் கட்டுப்பாடுகள் தற்போது நடைமுறையில் உள்ளது. ஆனால் நேற்று ஒரே நாளில் கொரோனா பாதிப்பு 28 ஆயிரத்து நெருங்கியது. இந்நிலையில் தமிழகத்தில் வருகின்ற மே 10ஆம் தேதி முதல் 24ம் தேதி வரை முழு ஊரடங்கு அமல் படுத்தப் படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதுமட்டுமன்றி மக்கள் தேவையில்லாமல் வெளியில் சென்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களில் தடுப்புப் பணிகளை மேற்கொள்ளும் அமைச்சர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். சென்னை – மா. சுப்ரமணியன், சேகர் பாபு, செங்கல்பட்டு- அன்பரசன், திருவள்ளூர்- சாமு நாசர், கோவை- சக்கரபாணி, கா. ராமச்சந்திரன், மதுரை – மூர்த்தி, பழனிவேல் தியாகராஜன், தூத்துக்குடி -கீதா ஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன், சேலம் -செந்தில் பாலாஜி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Categories

Tech |