நெல்லையில் வாலிபர் லாரி மோதி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளையில் டெல்சிங் என்ற வாலிபர் வசித்து வந்தார். இந்நிலையில் இவரும் அவருடைய நண்பரான கிஷோர் என்பவரும் பைக்கில் சுவிசேஷபுரத்திற்கு சென்றுகொண்டிருக்கும்போது அவ்வழியாக வந்த லாரியை இருவரும் முந்துவதற்காக பைக்கில் விரைவாக சென்றுள்ளனர். அப்போது சற்றும் எதிர்பாராதவிதமாக பைக்கிலிருந்து நிலைதடுமாறி 2 வாலிபரும் கீழே விழுந்ததில் டெல்சிங் லாரியினுடைய சக்கரத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார். அவருடைய நண்பர் லேசான காயத்துடன் தப்பினார். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.