Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

திடீரென்று இடிந்து விழுந்த சிலாப்…. இன்ஜினியருக்கு நேர்ந்த சோகம்…. நெல்லையில் பரபரப்பு….!!

திருநெல்வேலியில் வீட்டினுடைய சிலாப் இடிந்து விழுந்ததால் என்ஜினியர் பரிதாபமாக உயிரிழந்தார்.

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரில் என்ஜினீயரிங் பட்டதாரியான மனோலின் என்ற வாலிபர் வசித்து வந்தார். இவருடைய வீட்டை புதுப்பிக்க நினைத்த மனோலின்அதற்கான ஏற்பாடுகளை செய்ததோடு மட்டுமல்லாமல் அவரே மேற்பார்வையும் பார்த்து வந்தார். இந்நிலையில் அவர் வீட்டினுடைய சுவரை இடிக்கும் வேலையை சிலாப்பின் மீது ஏறி நின்று பார்த்துள்ளார். அப்போது சற்றும் எதிர்பாராத விதமாக திடீரென்று சிலாப் இடிந்து சுக்குநூறாய் உடைந்ததில் வாலிபர் படுகாயமடைந்தார்.

இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |