தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் ஊரடங்கு தளர்வுகளை அரசு அறிவித்து வந்தது. ஆனால் கடந்த ஒரு மாதமாக கொரோனா பாதிப்பு இதுவரை இல்லாத உச்சத்தை தொட்டுள்ளது. அதன் காரணமாக கடந்த மாதம் இரவு நேர ஊரடங்கு மற்றும் வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. ஆனாலும் கொரோனா பாதிப்பு குறைந்த பாடில்லை. அதன் காரணமாக தமிழகத்தில் பரவலாக பரவலை கட்டுப்படுத்த இன்று முதல் மே 24 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதில் பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் முழு ஊரடங்கு இன்று அமலுக்கு வந்துள்ள நிலையில், மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ-பாஸ் அவசியமில்லை. ஆனால் திருமணம், இறப்பு,நேர்முகத் தேர்வு மற்றும் மருத்துவ அவசரம் காரணமாக செல்ல சரியான சான்று பெறுதல் அவசியம் என தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது. வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து விமானம் மற்றும் ரயில்கள் மூலம் வரும் பயணிகள் eregister.tnega.org என்ற இணையதளம் மூலம் இ-பாஸ் பெற்றுக்கொள்ளலாம்.